"நான் செத்துட்டன், உடல் எடை காரணமா என் பிணத்தை இறக்க கஷ்டப்பட்டதா சொன்னாங்க" - அதிர்ச்சி தகவலை கூறிய அஞ்சு..!!

"நான் செத்துட்டன், உடல் எடை காரணமா என் பிணத்தை இறக்க கஷ்டப்பட்டதா சொன்னாங்க" - அதிர்ச்சி தகவலை கூறிய அஞ்சு..!!



actress-anju-speech-about-her-life

இயக்குனர் வசந்த் இயக்கிய "கேளடி கண்மணி" என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அஞ்சு. இதன்பின் ஹீரோயினாக, காமெடியராக, குணச்சித்திர நடிகையாக திரையில் வலம்வந்தார். முதன் முதலில் கடந்த 1979-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அஞ்சு, பின் பல படங்களில் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 1995-ஆம் ஆண்டு பிரபல நடிகரான டைகர் பிரபாகரனை திருமணம் செய்தார். இவர் ரஜினியின் முத்து படத்தில் நடிகை மீனாவின் மாமாவாக போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். தொடர்ந்து அஞ்சு கூறியபோது, "எனக்கு திருமணம் நடந்ததே ஒரு விபத்தாக தான் எண்ணுகிறேன். என்னை விட அவருக்கு வயது அதிகம். 

என் அப்பாவின் வற்புறுத்தலால் நான் அவரை திருமணம் செய்தேன். திருமணத்திற்கு பின்னர் தான் எனக்கு அவரின் உண்மையான முகம் தெரியவந்தது. ஏனெனில் என்னை விட அதிக வயதில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இது குறித்து அறிந்தவுடன் நான் விவாகரத்து செய்தேன். ஆனால் அதற்குள் என் மகன் பிறந்துவிட்டான். 

இதன்பின் என் மகனுடன் நான் சென்னை வளசரவாக்கத்தில் செட்டில் ஆகிவிட்டேன். அப்பொழுதுதான் என்னை பற்றி நிறைய வதந்திகள் ஏற்பட்டன. அதில் நான் தற்கொலை செய்து கொண்டதாகவும், என் உடல் எடை காரணமாக சடலத்தை கஷ்டப்பட்டு இறக்கியதாகவும் செய்திகள் எழுதப்பட்டிருந்தன. இதை அறிந்தவுடன் நான் மிகவும் வேதனைப்பட்டேன். நடிகையாக இருந்து பீல்ட் அவுட் ஆனால் இப்படி எல்லாம் நடக்கத்தானே செய்யும் என்று மனதை தேத்திக்கொண்டேன். 

அத்துடன் என்னைப் பற்றி கிசுகிசுவும் வந்தது. இயக்குனர் வசந்த் என்னை துரத்தி துரத்தி காதலிப்பதாகவும் செய்திவந்தது. அதை பார்த்து நான் அழுதே தீர்த்து விட்டேன். இதற்கு காரணம் முதன்முதலாகவே நான் அவரது படத்தில்தான் அறிமுகமானேன். ஆனால் அவரையும், என்னையும் பற்றிய இவர்கள் எப்படி தவறாக எண்ணினர் என்று எனக்கு தெரியவில்லை.

என்னை மகேந்திரன் சாரிடம் அழைத்துச் சென்றபோது, அடச்சி.. எதுக்கு அழுகிற.. இதெல்லாம் உனக்கு பப்ளிசிட்டி என்று கடந்து செல் என்றார். பின்னர் தான் நான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னை பாடி ஷேம் செய்தவர் முன்புகூட என் திறமையை நிரூபித்து காட்ட வேண்டும் என எண்ணினேன்" என அஞ்சு கூறியுள்ளார்.