சினிமா

என்னது.. நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணமா? தீயாய் பரவி வரும் புதிய தகவல்!!

Summary:

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதனை தொடர்ந்து அவர் அங்காடித்தெரு என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிதந்து பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி என தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான இவர் நாடோடிகள் 2 படத்திலும் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் இருவரும் பிரிந்து விட்டனர் எனவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 34 வயதாகும் நடிகை அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்க்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் ஹைதராபாத்தில் திருமணம் நடக்கவுள்ளது எனவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அஞ்சலி தரப்பிலிருந்து சரியான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.


Advertisement