சினிமா

34 வயதிலும் 10 ஆம் வகுப்பு பெண் போல் இருக்கும் நடிகை அஞ்சலி..! வைராலகும் அஞ்சலியின் புகைப்படம்.!

Summary:

Actress anjali latest photo goes viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைதொடர்ந்து கடந்த 2010ல் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த "அங்காடி தெரு" படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

மேலும் அங்காடி தெரு படத்திற்காக சிறந்த நடிகை ஃபிலிம்ஃபேர் விருதை தட்டிச்சென்றார். அங்காடி தெரு படத்தை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி உள்ளிட்ட பல படங்களில் வித்யாசமான தோற்றத்தில் நடித்து ரசிகர் மனதை கவர்ந்தார்.

குண்டா கொழுகொழுனு இருந்த நம்ம ...

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் 2 படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. தற்போது ஒருசில படங்களில் கமிட்டாகியுள்ள இவர் கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டிலேயே முடங்கி உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அஞ்சலி தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் தனது இன்ஸ்ட்ராகிராமில் புது புது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தன் செல்ல பிராணி நாய்குட்டியுடன் உள்ள போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் எப்படி "34வயசுல  சின்ன பாப்பா மாறியே இருக்கீங்க "என்று வியப்புடன் கேட்டு உள்ளனர்.


Advertisement