சினிமா

ரொம்ப மிஸ் பண்றேன்..! வீடியோ வெளியிட்டு ரொம்ப வருத்தப்படும் கோவை பேரழகி அதுல்யா ரவி.! வைரல் வீடியோ.!

Summary:

Actress adulya ravi latest video goes viral

கடந்த 2017 -ம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் கோவை பொண்ணு அதுல்யா ரவி. இதற்கு முன்னதாக பல்வேறு குறும்படங்களில் நடித்து நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர்.

முதல் படத்தை அடுத்து ஏமாளி, அடுத்த சாட்டை போன்ற படங்களில் நடித்த இவர் பின்னர் நாடோடிகள் 2 படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் அதுல்யா ரவி.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் இவர், கடந்த வருடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த கால வாழ்க்கையை மிகவம் மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார் அதுல்யா. இதோ அந்த வீடியோ.


Advertisement