அடேங்கப்பா.. பான் இந்தியா படத்தில் சூரரைப்போற்று நடிகையா?.. ஹீரோ யார் தெரியுமா?..!

தமிழ் திரையுலகில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை அபர்ணா. அதிலும் இவர் அப்படத்தில் 'காட்டுப்பயலே' என்ற பாடலுக்காக கொடுத்த எக்ஸ்பிரஷன்ஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
அத்துடன் இவர் திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், நடிகை அபர்ணா பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சமந்தா நடித்த "யூ டர்ன்" படத்தை இயக்கிய இயக்குனரான பவன்குமார் இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாக பகத் பாசில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கே.ஜி.எஃப் தயாரித்த ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறதாம்.