தமிழகம் சினிமா Covid-19

இதனை செய்தால் கொரோனா வந்தாலும் உயிரிழப்பு ஏற்படாது.! நடிகர் விவேக்..

Summary:

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு திரையுலக பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தற்போது நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. 

இந்தியாவில் ஒரு நாளுக்கு 2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 7,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்தார்.


Advertisement