வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகர்.. உதவிக்கேட்டு வெளியிட்ட பதிவு.!Actor Vishnu Vishal struck in floods

சென்னையில் நேற்று மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை பெய்தது. இந்த புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

ஒரு சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மண்டபங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகள் செய்யப்பட்டுள்ளது.

Chennai Flood

இந்த மழை வெள்ளத்தால் சென்னையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த மழை வெள்ளத்தால் நேற்று சென்னை முழுவதும் முடங்கி கிடந்தது.

Chennai Flood

இந்த நிலையில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் மின்சாரம் மற்றும் செல்போன் சிக்னல் வசதி எதுவும் இல்லாததால் தன்னுடைய வீட்டின் மாடியில் நின்று கொண்டு உதவி கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.