தமிழகம் சினிமா

திருமணம் நடக்கும் நேரத்தில் விஷாலுக்கு நேர்ந்த சோகம்! சோகத்தில் ரசிகர்கள்!!

Summary:

actor vishal injured


தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

நடிகர் விஷாலுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷா என்பவருக்கும் மார்ச் 16 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தமிழக்தில் நடிகர் விஷாலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது சண்டை காட்சிக்கான படப்பிடிப்பில் நடிக்கும்போது, விஷாலுக்கு கால் மற்றும் கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தநிலையில் இது தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் விஷால் கை மற்றும் காலில் கட்டுப்போட்டு அமர்ந்திருக்கிறார். இதனால்  இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்படதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஷால் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

 


Advertisement