விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
விழா மேடையிலையே மயங்கி விழுந்த நடிகர் விஷால்!! பரபரப்பு வீடியோ.

நடிகர் விஷால் மயக்கமடைந்த சம்பவம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஷால், தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்கிறார். பல ஹிட் படங்களில் நடித்துள்ள அவர், ரசிகர்களிடையே தனக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கியுள்ளார்.
மதகஜராஜா படம் மற்றும் உடல்நல விவகாரம்
பல வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த மதகஜராஜா படம் தற்போது ரிலீஸ் ஆனது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் சிறப்பான சாதனையை புரிந்தது. ஆனால் அந்த திரைப்பட விழாவில், விஷால் முகம் முழுவதும் மாற்றம் காணப்பட்டதோடு, கைநடுக்கம் இருந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அளித்த பேட்டியில், உடல்நிலை சரியானது என்றும் கூறியிருந்தார்.
கூவாகத்தில் விஷாலுக்கு ஏற்பட்ட மயக்கம்
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கூவாகம் பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில், விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியின் போது, எதிர்பாராத விதமாக விஷால் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையும் படிங்க: தனுஷ்க்கு ஜோடி இந்த நடிகையாமே!! அப்போ கூட்டம் பிச்சுக்கும்!!
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
விஷால் மயங்கியதும், நிகழ்ச்சியினரால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவரது நிலை குறித்து மருத்துவமனையிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ரசிகர்கள் அனைவரும் அவருக்கு விரைவில் குணமடையவேண்டும் என பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நிகழ்ச்சியில் மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்#Vishal #Villupuram #Koovagam #News18TamilNadu pic.twitter.com/6BWe2VCVBP
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 11, 2025
இதையும் படிங்க: பட்டு வேட்டி சட்டையில் புதிய காதலியுடன் ரவி மோகன்! மனைவி ஆர்த்தி கோபத்தில் குமரி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை....