சினிமா

விஜய் இல்லையாம்..! கில்லி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகர் தான்! யார் தெரியுமா.?

Summary:

Actor vikram was the first choice for vijaiys gilli movie

இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடித்து மெகாஹிட் ஆன திரைப்படம் கில்லி. பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த இந்த திரைப்படம் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

மேலும், இந்த படத்தின் வெற்றிக்கு, படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜும் ஒரு காரணம் என்றே கூறலாம். இந்த படத்தில் இவர் பேசிய வசனங்கள் இன்றுவரை மக்களால் பேசப்பட்டுவருகிறது. மேலும், கில்லி படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் சன் டீவியில் கில்லி திரைப்படம் ஒளிபரப்பான போது விஜய் ரசிகர்கள்  ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

விஜய்க்கு இப்படி ஒரு மெகாஹிட் வெற்றியை கொடுத்த இந்த கில்லி படத்தில், முதலில் விஜய் இல்லை, நடிகர் விக்ரம்தான் நடிக்க இருந்ததாம். ஆனால், விக்ரம் வேறுசில படங்களில் பிசியாக இருந்ததால் இந்த வாய்ப்பு விஜய்க்கு சென்றதாக படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கில்லி படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் தான். மேலும், கில்லி படத்தில் விஜய் மேக்கப் எதுவுமே போடாமல் நடித்ததாக கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத்  கூறியுள்ளார்.


Advertisement