அட அட.. அப்பாவையே மிஞ்சிடுவார் போல! வைரலாகும் தளபதி மகனின் செம லுக் புகைப்படம்!!

அட அட.. அப்பாவையே மிஞ்சிடுவார் போல! வைரலாகும் தளபதி மகனின் செம லுக் புகைப்படம்!!



actor-vijay-son-photo-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா. அவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர். தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார்.  அதில் விரைவில் சினிமாவில் நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக விஜய் மகன் சஞ்சயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் அவர் காரில் தனது நண்பர்களுடன் தந்தையின் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில் தற்போது செம மாஸாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் அச்சு அசல் விஜய் போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.