நடிகர் யோகி பாபுவுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்திய நடிகர் விஜய்... வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் யோகி பாபுவுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்திய நடிகர் விஜய்... வைரலாகும் புகைப்படம்!!


Actor Vijay send surprise gift to yokibabu

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் யோகி பாபு. இவர் முதலில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது முன்னணி காமெடி நடிகனாக கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

இவர் காமெடியனாக மட்டுமின்றி கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பொம்மை நாயகி மற்றும் மலை ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது யோகி பாபுவுக்கு நடிகர் விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள யோகிபாபு, இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸாக கொடுத்த விஜய் அண்ணாவிற்கு நன்றி என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.