மிஸ் பண்ணிடாதீங்க.! 10 ஆண்டுகளுக்கு பிறகு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! செம குஷியில் தளபதி ரசிகர்கள்!!

மிஸ் பண்ணிடாதீங்க.! 10 ஆண்டுகளுக்கு பிறகு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! செம குஷியில் தளபதி ரசிகர்கள்!!



Actor Vijay interview after 10 year for beast movie

தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

 இந்நிலையில் நடிகர் விஜய், தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதாவது அவர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பீஸ்ட் படத்திற்காக தொலைக்காட்சியில் பேட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதில் இயக்குனர் நெல்சன் கேள்வி கேட்க, அதற்கு விஜய் பதிலளித்துள்ளார். இந்த பேட்டி ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதனை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துள்ளனர்.