சினிமா

ரஜினி, கமல், அஜித் பட பிரபல நடிகர் காலமானார்! வருத்தத்துடன் திரையுலக பிரபலங்கள் இரங்கல்!!

Summary:

மொத்த பழம்பெரும் நடிகரான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.

மூத்த பழம்பெரும் நடிகரான உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தனது 98-ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவருக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த பம்மல் கே சம்பந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ஆனாலும் அதனைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்  பழம்பெரும் நடிகரான உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement