என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
கண்கலங்க வைக்கும் வீடியோ... அவரா இது..? கருப்பன் குசும்புக்காரன் புகழ் நடிகருக்கு இப்படி ஒரு சோதனையா?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் நடிகர் தவசி தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வருத்தப்பாடாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் நடிகர் தவசி. அந்த படத்தில் அவர் பேசிய 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, படம் பார்க்கும்போது ரசிகர்களை சிரிக்கவும் வைத்தது.
மேலும் அவர் பேசிய அந்த வசனம் தற்போதும் சமூக வலைத்தளங்களில் புகைப்பட மீம்ஸாக வலம் வந்து கொண்டிருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை அடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் உடல் மெலிந்து ஆளே மாறிபோயுள்ளார். மேலும் தனது மெலிந்த தோற்றத்துடன் அவர் திரைத்துறையினரிடம் தனது சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும்நிலையில் பிரபலங்கள் அவருக்கு உதவ முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.