நம்பவே முடியலை.. டாடா பார்த்துவிட்டு போனில் பாராட்டிய முன்னணி நடிகர்.! நெகிழ்ச்சியில் திக்குமுக்காடிய கவின்!!actor-thanush-wish-kavin-for-dada-movie

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்துறையில் பிரபலமாக ஜொலிப்பவர்கள் ஏராளம். அந்த வரிசையில் தற்போது முன்னேறி வருபவர் நடிகர் கவின். அவரது நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் டாடா. இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். மேலும் ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

ரொமான்டிக் திரைப்படமான டாடாவில் கவினுக்கு ஜோடியாக ஹீரோயினாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், ஐஸ்வர்யா, பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பலரும் நடிகர் கவினை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் டாடா படத்தை பார்த்துவிட்டு தனுஷ் பாராட்டியது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஹாய் கவின் நான் தனுஷ் பேசுறேன்.. எனது காதில் நான் கேட்டதெல்லாம் உண்மையா? என நம்பவே முடியவில்லை. நான் அந்த வியப்பில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை. டாடா படம் பார்த்துவிட்டு தனுஷ் சார் எனக்கு போன் செய்தது இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

உங்களது படங்களை, திறமைகளை நான் தியேட்டரில் கண்டு வியந்துள்ளேன். இன்று உங்களிடம் இருந்து வந்த அழைப்பை என்னால் வெறும் நன்றி என்று எளிமையாக சுருக்கி விட முடியாது. வளர்ந்து வரும் நடிகர்களை பாராட்டுவதற்காக உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களது வாத்தி படத்திற்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.