அடேங்கப்பா.. இம்புட்டு லவ்வா.! தளபதி விஜய் மட்டும் பொண்ணா பிறந்திருந்தால்.. பிரபல நடிகர் கூறியதை பார்த்தீங்களா!!

அடேங்கப்பா.. இம்புட்டு லவ்வா.! தளபதி விஜய் மட்டும் பொண்ணா பிறந்திருந்தால்.. பிரபல நடிகர் கூறியதை பார்த்தீங்களா!!


Actor telephone raju loves vijay most

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவை போல கொண்டாடுவர்.

தளபதி விஜய் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் நடிகர் டெலிபோன் ராஜு தளபதி விஜய் குறித்து கூறியது வைரலாகி வருகிறது.

vijay

தளபதி விஜய் மீது தனிபிரியம் கொண்ட நடிகர் டெலிபோன் ராஜு, எனக்கு விஜய்னா ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் நான் அவரைதான் காதலித்திருப்பேன். அதேமாதிரி நான் பெண்ணாக பிறந்திருந்தாலும் விஜய்யை தான் காதலித்திருப்பேன் என கூறியுள்ளார். அது வைரலான நிலையில் இவருக்கு தளபதி விஜய் மீது இவ்வளவு பாசமா! என ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர்.