தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
நடிகர் சுஷாந்தை தொடர்ந்து பிரபல இளம் முன்னணி சீரியல் நடிகர் தற்கொலை! வெளியான அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜா, சுஷாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் தொடர்ந்து மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவர்களை தொடர்ந்து தற்போது கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த சுஷில் கவுடா தற்கொலை செய்து, உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயது நிறைந்த சுஷில் அந்தபுரா என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் மாண்டியாவில் வசித்துவந்த சுஷில் நேற்று அவருடைய வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். நடிகர் சுஷிலின் மரணம் குடும்பத்தார் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சுஷில் நடிகர் துனியா விஜய் கதாநாயகனாக நடித்த சலாகா என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.