சினிமா

ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா பண உதவி?? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! தொகை எவ்வளவு தெரியுமா??

Summary:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் மக்கள் தினசரி அன

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் மக்கள் தினசரி அன்றாட வாழ்க்கை முறையை இழந்து வருகின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக முதல்வரின் கொரொனா தடுப்பு நிவாரண நிதிக்கு நடிகர் சூர்யா, கார்த்திக் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 1 கோடி வழங்கினர். இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா கொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சுமார் 250 பேருக்கு தலா ரூ.5000 பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் அனுப்பியுள்ளதாகத்தாக தகவல் வெளியாகியுள்ளது .

இதுகுறித்து சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் வங்கியில் டெபாசிட் ஆனது குறித்த மெசேஜ்-ஐ ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் நடிகர் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்பணம் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement