சினிமா

விஜய் நோ சொன்ன கதையில் நடிகர் சூர்யா! யார் இயக்குனர் தெரியுமா?

Summary:

Actor suriya acting in sasikumar direction

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. NGK படத்திற்கு பிறகு இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

சுப்ரமணியபுரம், ஈசன் படத்திற்கு பிறகு படம் இயக்குவதை நிறுத்திவிட்டு படம் நடிப்பதில் பிசியாக இருந்து வருகிறார் சசி குமார். அவ்வப்போது சசி குமார் படம் இயக்க போவதாக தகவல்கள் வெளிவருவதும், அவர் அதுக்கு மறுப்பு சொல்வதும் வழக்கமாக உள்ளது.

தற்போது பேட்ட படத்தில் நடித்துள்ளார் சசி குமார். இந்நிலையில் சூர்யாவின் NGK , மற்றும் காப்பான் படத்திற்கு பிறகு சசிகுமார் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

படத்தின் கதையை சசிகுமார் சூர்யாவிடம் கூற சூர்யாவிற்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாம், எனவே படத்தில் நடிக்க சூர்யா சம்மதம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த கதையை முதலில் சசிகுமார் தளபதி விஜய்யிடம் கூறியுள்ளார். ஏதோ ஒருசில காரணங்களால் விஜய் அந்த கதைக்கு நோ சொல்லியுள்ளார்.


Advertisement