சினிமா

நடிகர் விஜயின் அடுத்தபடம் மாஸாக இருக்கும் என கூறிய அட்லீ! புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீமன்!.

Summary:

actor sriman shared photo with vijay


இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று சர்க்கார் படம் வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக மீண்டும் இயக்குநர் அட்லீயுடன் இணைகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, கியாரா அத்வானி நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் என விஜய் நடித்த இரு படங்களும் ஹிட் ஆன நிலையில், இந்த படம் மாஸாக இருக்கும் என இயக்குநர் அட்லீ ஏற்கனவே கூறியிருந்தார். 

இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன், தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் உடன் இருப்பதைபோல ஒரு புதிய படத்தை வெளியிட்டுள்ளார். அவர் அந்த புகைப்படத்துடன் “எங்களுக்குள் 22 வருட கால நட்பு. என்னை ஆதரிப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வழிக்காட்டுதல், பாராட்டுதல், உங்களின் தன்னடக்கம், எளிமை, அமைதி, சத்தமே இல்லாமல் உதவும் மனம் மேலும் சாதுவாக வேலை பார்க்கும் மந்திரம் எல்லாம் அருமை. விஜய் உங்களை நேசிக்கிறேன். இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 


Advertisement