"லவ் யூ விஜிமா.. தளபதி கூட நடிக்கிற சான்ஸ மிஸ் பண்ணமாட்டன்".. வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்..! 

"லவ் யூ விஜிமா.. தளபதி கூட நடிக்கிற சான்ஸ மிஸ் பண்ணமாட்டன்".. வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்..! 


actor-sriman-joins-with-varisu-movie

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, சியாம், ஜெயசுதா, சங்கீதா, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Actor sriman

தெலுங்கில் பிரபல இயக்குனரான தில் ராஜு இப்படத்தை தயாரித்து வரும் நிலையில், முதல் முறையாக நடிகர் விஜய்யின் படத்திற்கு இசையமைத்து வருகிறார் பிரபல இசையமைப்பாளர் தமன். அத்துடன் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. 

இதனை தொடர்ந்து வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலில் இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், வாரிசு படத்தில் நடித்த புகைப்படத்தை பகிர்ந்து பிரபல நடிகர் தான் நடிப்பதாக அறிவித்துள்ளார்.

Actor sriman

நடிகர் ஶ்ரீமன் விஜயுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். அவருக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். இது தொடர்பாக ட்விட்டரில் இயக்குனர் வம்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஸ்ரீமன், "வாரிசு படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தளபதியுடன் நடிக்க வாய்ப்புகிடைத்தால் நான் தவறவிட மாட்டேன். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி" என தெரிவித்திருந்தார்.