நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் சூரி இந்த வேலைதான் பார்த்தாராம். பட்ட கஷ்டம் பற்றி சூரி உருக்கம்.

Actor soori previous job before acting carrier


Actor soori previous job before acting carrier

இன்றைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் சூரி. பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்பின்னர் விஜய், சூர்யா, விஷால் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூரி தான் சினிமாவில் நடிப்பதற்கு முன் பட்ட கஷ்டங்களையும், தான் பார்த்துவந்த வேலைகள் பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Soori

குடும்பத்தில் வறுமை நிலவிய நிலையில் தான் சினிமாவில் நன்றாக சம்பாதிக்கலாம் என எண்ணி சென்னை வந்தாராம். பலரிடம் வேலை கேட்டும் யாரும் வேலை தரவில்லையாம். இதனால் தங்கியிருக்கும் வீட்டின் வாடகை கொடுக்க மண் அள்ளும் லாரி ஒன்றில் கிளீனராக வேலைபார்த்ததாக சூரி கூறியுள்ளார்.

ஒரு முறை அம்மா என்னிடம் போனில் பேசும்போது சாப்பிட்டியா? என கேட்டார். நான் எங்க சாப்டேன், பச்சை தண்ணி குடிச்சிட்டு படுத்திருக்கேன் என கூறினேன். அவர் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். மயங்கி விழுந்துவிட்டார். என சூரி கூறியுள்ளார்.