அம்மாவை கடவுள் படைத்ததே இதற்காகதான்.! அசத்தலான புகைப்படத்துடன் நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவு!!
அம்மாவை கடவுள் படைத்ததே இதற்காகதான்.! அசத்தலான புகைப்படத்துடன் நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவு!!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சூரி. தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் மிகவும் அசத்தலாக நடித்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
தற்போது சூரி கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் இன்று உலக அன்னையர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது அம்மாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
உலகில் எந்த மூலையில் இருந்தாலும் "என்னடா சாப்பிட்டியா" ன்னு அம்மா கேட்டவுடன் அத்தனை களைப்பும் ஒரு நொடியில் கரைந்து போகும் . இறைவன் எல்லா நேரமும் நம்முடன் இருக்க முடியாது அதனால் தான் தாயை படைத்தான். தெய்வங்களாக பூமியில் வாழும் அத்தனை தாய்மார்களுக்கும் #அன்னையர்_தின_வாழ்த்துக்கள்
— Actor Soori (@sooriofficial) May 14, 2023
இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ‘என்னடா சாப்பிட்டியா’ ன்னு அம்மா கேட்டவுடன் அத்தனை களைப்பும் ஒரு நொடியில் கரைந்து போகும். இறைவன் எல்லா நேரமும் நம்முடன் இருக்க முடியாது அதனால்தான் தாயை படைத்தான். தெய்வங்களாக பூமியில் வாழும் அத்தனை தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.