தமிழகம் சினிமா

குரல் ஓய்ந்துவிட்டது!! டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல்!! வைரல் பதிவு

Summary:

சமூக செயற்பாட்டாளர் ட்ராபிக் ராமசாமி மறைவுக்கு நடிகர் சூரி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளர் ட்ராபிக் ராமசாமி மறைவுக்கு நடிகர் சூரி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு சிம்ம செப்பமானாக விளங்கியவர் டிராபிக் ராமசாமி. தற்போது 87 வயதாகவும் இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தனது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இவரது உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்து இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவரும்நிலையில், நடிகர் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சமுதாயத்தின் மீது அக்கறையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையும் கொண்டு சமுதாயத்தில் நிகழும் தவறான செயல்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரின் குரல் ஓய்ந்துவிட்டது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement