தனது பணியில் இருக்கும்போது பொதுமக்களை சந்தித்து உதவி செய்யும் சோனு சூட்! வீடியோவை பார்த்து பாராட்டும் மக்கள்.!

தனது பணியில் இருக்கும்போது பொதுமக்களை சந்தித்து உதவி செய்யும் சோனு சூட்! வீடியோவை பார்த்து பாராட்டும் மக்கள்.!


actor sonu sut helping to people

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற கள்ளழகர், கோவில்பட்டி வீரலெட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட்.  

நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதனால் பலருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  நடிகர் சோனு சூட், கொரோனோவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்காக தனது 5 நட்சத்திர ஹோட்டலை வழங்கினார். வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது உள்ளிட்ட ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.


இந்தநிலையில் ஹைதராபாத்தில் சினிமா ஷூட்டிங்கில் உள்ள சோனு சூட் தன்னிடம்  உதவிக்கேட்டு வரும் பொதுமக்களை சந்தித்து உதவி செய்து வருகிறார். இதுவரை சமூக வலைதளங்கள் வழியாக உதவி வந்த சோனு சூட் தற்போது படப்பிடிப்புக்கு சென்ற இடத்திலும் தன்னை தேடி வரும் பொது மக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு உதவுகிறார். இந்தநிலையில், நடிகர் சோனு சூட்டை சந்திப்பதற்காக 100 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து வந்து உதவி கேட்பவர்களுக்கு அன்போடு ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மக்களை சந்தித்து உதவிகளை செய்து வருகிறார், இதுதொடர்பான வீடியோவை ரமேஷ் பாலா என்ற தயாரிப்பாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.