#Breaking: "எமனே தப்பு செய்தாலும் தட்டிக்கேட்பேன்" அட்டகாசமாக வெளியானது சிவகார்த்திகேயனின் மாவீரன் பட டிரைலர்.. லிங்க் இதோ.!
சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஸ்கின், யோகிபாபு, சரிதா உட்பட பலர் நடித்து, ஜூலை 14ம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் மாவீரன்.

இந்த படத்தை அஸ்வின் மடோனாஸ் இயக்கியுள்ளார், பரத் சங்கர் இசையமைத்துள்ளார். டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்பட டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.