சினிமா

சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக முதலில் இந்த பிரபல தமிழ் நடிகர்தான் நடிக்க இருந்ததாம்..! ஆனால்.? யார் தெரியுமா.?

Summary:

Actor sathyaraj say no to act villain for rajini in sivaji movie

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சிவாஜி. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷ்ரேயா நடித்திருப்பார். AVM நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

2007 ஆம் ஆண்டே சுமார் 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்தது. சிவாஜி படத்தில் ஹீரோ ரஜினிக்கு நிகராக படத்தின் வில்லனுக்கும் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.

நடிகர் சுமன், ஆதிகேசவன் என்ற பெயரில் சிவாஜி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா மட்டும் இல்லாது, இந்திய அளவில் பிரபலமானார். ஆனால், இந்த வில்லன் வாய்ப்பு முதலில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவருக்குத்தான் சென்றதாம். அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிடவே அந்த வாய்ப்பு சுமனுக்கு சென்றுள்ளது.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை. நடிகர் சத்யராஜ் தான். சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்குமாறு இயக்குனர் சங்கர் முதலில் சத்யராஜைதான் அணுகியுள்ளார். ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக சத்யராஜ் இந்த வாய்ப்பை மறுத்துள்ளார். 


Advertisement