கொரோனா பாதிக்கப்பட்ட நடிகர் சரத்குமாரின் தற்போதைய நிலை என்ன..? அவரது மகள் வெளியிட்ட முக்கிய அறிக்கை..

கொரோனா பாதிக்கப்பட்ட நடிகர் சரத்குமாரின் தற்போதைய நிலை என்ன..? அவரது மகள் வெளியிட்ட முக்கிய அறிக்கை..


Actor sarathkumar discharged from hospital after corona treatment

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சரத்குமார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர், அரசியல் கட்சி தலைவர் என தமிழகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் சரத்குமார். இருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்காக ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சரத்குமார் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட தகவலை அறிந்த அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கா பிரார்த்தனை செய்ய தொடங்கினர். மேலும் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

sarathkumar

இந்நிலையில் தனது தந்தை கொரோனா சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் எனவும் இருப்பினும், அவர் அடுத்த 10 நாள்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது தந்தைக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் என அனைவர்க்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் வரலக்ஷ்மி சரத்குமார் தெரிவித்துள்ளார்.