ஜெய்பீம் சர்ச்சை: அதுமாதிரியெல்லாம் பேசக்கூடாது..! நடிகர் சந்தானம் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

ஜெய்பீம் சர்ச்சை: அதுமாதிரியெல்லாம் பேசக்கூடாது..! நடிகர் சந்தானம் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?



Actor Santhanam talk about jaibhim issue

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

ஆனால் இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. அதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் இருந்த நாட்காட்டியில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து அந்த காட்சி நீக்கப்பட்டது. ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. 

இதைத்தொடர்ந்து, திரைத்துறையினர் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சினிமாவில் எதனை வேண்டுமானாலும் உயர்த்திக் காட்டலாம். அப்படி உயர்த்திக் காட்டுவதற்காக இன்னொன்றை தாழ்த்தி காட்டக் கூடாது என நடிகர் சந்தானம் ஜெய்பீம் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Santhanam

சென்னையில் நேற்று நடைபெற்ற சபாபதி படம் தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசுகையில், ஜெய்பீம் படமாக இருந்தாலும் சரி எந்த படமானாலும் சரி. நாம ஒரு கருத்தை சொல்றோம், பேசறோம். இந்துயிசத்தை பற்றி உயர்ந்ததுன்னு என்ன வேணும்னாலும் பேசலாம். அது பிரச்சனை கிடையாது. ஆனால் கிறிஸ்டியன் தப்பு, அவன் தாழ்த்தப்பட்டவன்னு பேசக் கூடாது.

எது நம்ம கருத்தோ அதை தூக்கி பேசலாம். அடுத்தவங்க காயப்படுற மாதிரி அவங்களை தாழ்த்தி பேசக் கூடாது. சினிமாங்கிறது 2 மணிநேரம் லைட் ஆப் பண்ணிட்டு எல்லாரும் எல்லா சமூகத்தினரும் பார்ப்பது. அங்க இது தேவைப்படாத விஷயம். என சந்தானம் பேசினார்.