நடிகர் சந்தானம் நடித்த முதல் படம் மன்மதன் இல்லை. எது முதல்படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். வின் டிவி என்னும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பென்ச் என்ற நிகழ்ச்சி மூலம் மீடியாவிற்குள் வந்தவர் நடிகர் சந்தானம். அதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைச்சிஎல் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்துவந்தார்.
அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் நடிகர் சந்தானம். பின்னர் நடிகை ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடித்துள்ளார் நடிகர் சந்தானம்.
ஒவொரு நிகழ்ச்சியிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் சந்தானம். பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்தார் சந்தானம். நடிகர் சிம்பு நடித்த மன்மதன் திரைப்படம்தான் சந்தானத்திற்கு முதலாப்டம் என நாம் நினைத்திருப்போம் ஆனால் வல்லவன் சந்தானத்திற்கு முதல் படம் இல்லை.
நடிகா் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் காதல் அழிவதில்லை. இப்படத்தில் கல்லூரி மாணவராக சிம்பு நடித்திருப்பாா். அதில் அவரது நண்பர்களில் ஒருவராக சந்தானம் நடித்திருப்பாா். இதுதான் நடிகர் சந்தானம் நடித்த முதல் திரைப்படம்.