நடிகர் விஜய் வாழ்வில் இவ்வளவு துயரங்களா.! அவரது நெருங்கிய நண்பர் வெளியிட்ட ஷாக் பதிவு!!

நடிகர் விஜய் வாழ்வில் இவ்வளவு துயரங்களா.! அவரது நெருங்கிய நண்பர் வெளியிட்ட ஷாக் பதிவு!!actor sanjeev tweet about vijay

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவர்களது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.

 படங்கள் மட்டுமின்றி அவர்களை குறித்த சிறு அறிவிப்புகள், படத்தின் ட்ரெய்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி மகிழ்வர். அதனைப்போலவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கடுமையான மோதல் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.

vijay

 இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவர உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் ஆகஸ்ட் 8 தல தரிசனம் என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது பின்னர் அதற்கு எதிராக ஆகஸ்ட்8பாடையை கட்டு என நெகடிவ் ஹேஸ்டேக்கை உருவாக்கி  விஜய் ரசிகர்கள் ட்ரண்ட் செய்தனர்.

அதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் ரிப் ஆக்டர் விஜய் என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரண்ட் செய்தனர். இந்த செயல் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் பெருமளவில் அதிர்ச்சியடைய செய்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் ரசிகர்கள் லாங்லிவ்விஜய் என்ற பாசிட்டிவான ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை ட்ரெண்டாகி வருகின்றனர்.

vijay

இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சீரியல் நடிகரும், விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் பார்க்காத துரோகமும் இல்லை விஜய் அளவிற்கு எதிரிகளும் யாருக்கும் இல்லை. இருந்தும் திரையில் விஜய் அதைப் பற்றி பேசியது இல்லை. பெருமையாக சொல்வேன் என் நண்பன் என பதிவிட்டுள்ளார்.