பூ போன்ற உடை.. வெளுப்பான தேகம்... நடிகை சமந்தாவின் பியூட்டி லுக்கில் வைரலாகும் புகைப்படம்!

பூ போன்ற உடை.. வெளுப்பான தேகம்... நடிகை சமந்தாவின் பியூட்டி லுக்கில் வைரலாகும் புகைப்படம்!



actor-samantha-latest-photo

பிரபல நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர்  சமந்தா. இந்த படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று குறுகிய காலத்திலையே பிரபலமும் ஆகிவிட்டார்.

அதன் பயனாக இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஜய், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துவிட்டார் அம்மணி.

samantha

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும்இவர்,  தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் குடும்பம், மாடியில் விவசாயம், ஒர்க்அவுட் மறுபக்கம் சினிமா என பிஸியா இருக்கும் இவர், சமூக வலைத்தளங்களில்  தனது ரசிகர்களுக்கு அப்டேட் செய்தபடியும் உள்ளார். அந்த வகையில் வெள்ளை உடையில் ஒரு பூ போன்ற போஸ் ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.