சினிமா

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு.! கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்.!

Summary:

actor sale karuvadu

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் இன்றளவும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் சினிமா துறையும், சினிமா கலைஞர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் ஈடுபட்டு வருவது குறித்து தெரிய வந்துள்ளது. மகாரஷ்டிர நடிகரான ரோஹன் பெட்னேக்கர் என்பவர், மராத்தியில் சூப்பர் ஹிட் அடித்த பாபாசாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்து பிரபலமானார்.

ரோஹன் பெட்னேக்கர் தற்போது கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படப்பிடிப்புகள்  நிறுத்தப்பட்டு இருப்பதால், கருவாடு விற்பனையில் இறங்கியுள்ளார். மீண்டும் எப்போது நடிக்கும் வேலை வரும் என தெரியவில்லை, இதனால் தனது அப்பா செய்த கருவாடு விற்கும் வேலையை செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தனது அப்பா இந்த வேலை செய்யும்பொழுதே எனக்கு இதில் கொஞ்சம் புரிதல் இருந்தது. இந்த வேலையை செய்வதற்கு எனக்கு எந்த அவமானமும் இல்லை என தெரிவித்துள்ளார். 


Advertisement