சிறப்பு அனுமதி! தனி விமானத்தில் அமெரிக்கா பறக்கும் நடிகர் ரஜினிகாந்த்!

சிறப்பு அனுமதி! தனி விமானத்தில் அமெரிக்கா பறக்கும் நடிகர் ரஜினிகாந்த்!


actor rajinikanth going to america for treatment

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணாத்த படம் தீபாவளியன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 நடிகர் ரஜினிகாந்திற்கு உடல் நிலை சரியில்லாத போது அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் படப்பிடிப்பிற்கு இடையே அவ்வப்போது அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக செல்வார். இதற்கிடையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வந்துள்ளது. அதனால் பல நாடுகளிலும் விமான சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதற்காக அவர் மத்திய அரசிடம் அனுமதி கோரி அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜூன் 20 சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளார் எனவும், அதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.