சினிமா

சூப்பர்ஸ்டாரின் புதுப்படம் பற்றிய தகவல்   

Summary:

actor-rajini

 
இன்றைய  தமிழ் சினிமாக்களில் வளரும் இளம் இயக்குனர்கள் தொடர்ந்து  பல வெற்றிப்படங்கலாய் கொடுத்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி   வருகிறார்கள்.

அதனால் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் இளம் இயக்குனர்களிடம்  கதைகளை  கேட்டு நடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்தவகையில் கபாலி ,காலா திரைப்படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் "பேட்ட". இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக மக்கள் செல்வன்  விஜய் சேதுபதி நடிக்கஉள்ளார் . பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். 

ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை சிம்ரன் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் தொடங்கப்பட்டு . தற்போது லக்னோவில் அடுத்தகட்ட  படப்பிடிப்பு நடந்து வருகிறது.  

இந்த படத்தின் இயக்கபடம் மற்றும் படத்தின் பெயர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், லக்னோவில் நடைபெற்று வரும் 'பேட்ட' படப்பிடிப்பில் ரஜினியின் பாதுகாப்புக்காக 25 போலீஸ்களை உத்திரபிரதேச அரசு  அனுப்பியுள்ளது. 


Advertisement