நடிகர் ரகுமான் வீட்டில் நேர்ந்த துயரம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!

தமிழ் சினிமாவில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான நிலவே மலரே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரஹ்மான். அதனைத் தொடர்ந்து அவர் புது புது அர்த்தங்கள், சங்கமம் போன்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் ரஹ்மான் தற்போது வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.கடந்த 2016-ஆம் ஆண்டு இவர் நடித்த துருவங்கள் பதினாறு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஹ்மான் கைவசம் தற்போது துப்பறிவாளன் 2, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி அவர்கள் உயிரிழந்துள்ளார். 84 வயது நிறைந்த அவர் நேற்று பெங்களூருவில் காலமானார். இவரது இறுதி சடங்கு கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள நிலம்பூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.