ரஜினியை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற ராகவா லாரன்ஸ்; காரணம் இதுதான்.. குருவின் வெற்றியை எட்டுவாரா சிஷ்யன்?.!
பி. வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்து செப். 28ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் சந்திரமுகி 2.
சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுகிறது. இப்படம் சந்திரமுகியில் கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்டு இருப்பதாக ராகவா தெரிவித்து இருந்தார்.
படம் நாளை மறுநாள் திரையரங்க்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினிகாந்த இநேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இந்த தகவலை அவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சந்திரமுகி திரைப்படம் பாபாவின் மிகப்பெரிய சரிவுக்கு பின்னர் ரஜினியை திரையுலகில் உயர்த்திவிட பெரும் காரணமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.
பல திரையரங்குகளில் 100 நாட்கள், சில திரையரங்கில் ஒரு ஆண்டு முழுவதும் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அதே வெற்றியை சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகமும் பெறுமா? என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.