பிரபல தமிழ் காமெடி நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!

பிரபல தமிழ் காமெடி நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!


actor-pondamani-treatment-in-hospital

பிரபல தமிழ் நடிகர் போண்டாமணி இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் போண்டாமணி. இவர் தமிழில் ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை, வேலாயுதம், சச்சின், வசீகரா என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Pondamani

இந்நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் போண்டாமணி விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.