சினிமா

வாய்விட்டு உதவி கேட்ட ராகவா லாரன்ஸ்..! தேடிச்சென்று உதவி செய்த நடிகர் பார்த்திபன்.! குவியும் வாழ்த்துக்கள்.!

Summary:

Actor parthipan sends 1000 KG rice to ragawa Lawrence

கொரோனா ஊரடங்கு அறிவித்ததில் இருந்தே பல்வேறு நிவாரணங்களையும், உதவிகளையும் செய்துவருகிறார் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ். ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி, சினிமா தொழிலார்கள், நடன கலைஞர்கள், ஊனமுற்றோர் என பலகோடிகள் நிவாரணமாக வழங்கியுள்ளார் லாரன்ஸ்.

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள், பசியால் வாடும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் விதமாக நடிகர் லாரன்ஸ் தாய் என்ற குழு ஒன்றைத் துவங்கி அதன் மூலம் சினிமா திரையில் இருக்கும் தனது நண்பர்கள் உதவி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1000 கிலோ அரிசியை அனுப்பி வைத்தார். இதனை அடுத்து, நடிகர் பார்த்திபன் அவர்கள் நடிகர் லாரன்ஸின் தாயாருக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நிலையில், லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று 1000 கிலோ அரிசி அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.


Advertisement