மனுஷனுக்கு எம்புட்டு திறமை இருந்திருக்கு!! இதெல்லாம் தெரியாம போச்சே!! திறமை உள்ள நடிகர் பாண்டுவை இழந்தது தமிழ் திரையுலகம்!

மனுஷனுக்கு எம்புட்டு திறமை இருந்திருக்கு!! இதெல்லாம் தெரியாம போச்சே!! திறமை உள்ள நடிகர் பாண்டுவை இழந்தது தமிழ் திரையுலகம்!


actor-pandu-special-talents-YS2RNM

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த 74 வயதான நடிகர் பாண்டு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். இவரது மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

74 வயதான பாண்டுவுக்கு குமுதா என்ற மனைவியும், பிரபு, பஞ்சு, பின்டு என 3 மகன்களும் உள்ளனர். மேலும் இவர் சினிமாவையும் தாண்டி எண்ணற்ற பொது சேவைகளையும் மக்களுக்கு செய்துள்ளார். அதுபோக நடிகர் பாண்டு மிக சிறந்த லோகோ வடிவமைப்பாளரும் கூட.  நடிகர் பாண்டுதான் அதிமுக கொடியை வடிவமைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு சுற்றுலா துரையின் லோகோவையும் வடிவமைத்து மக்கள் மத்தியில் பாராடுக்களை பெற்றவர்.

Latest tamil news

பின்னர் நந்தனம் பெரியார் பில்டிங்கில் இருக்கும் உலோக எழுத்துகள் பாண்டு வடிவமைச்சது என குறிப்பிடதக்கது. அதன் பிறகு நிறைய ஆர்டர்கள் எனக்குக் கிடைச்சுது. `எழுத்துன்னா அது பாண்டு தான்’னு நல்ல பேர் வாங்கினேன்’ என ஒரு பேட்டியில் கூட பாண்டு  குறிப்பிட்டிருந்தார்.