நடிகர் நாசரா இது! ஹாலிவுட் ஸ்டைலில், இளம் ஹீரோக்களையே மிஞ்சிட்டாரே! புகைப்படத்தைக் கண்டு வாயைப் பிளந்த ரசிகர்கள்!

Summary:

Actor nasar latest photoshoot

தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த கல்யாண அகதிகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாசர். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கிய நிலையில் அவர் தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராக புகழின் உச்சிக்கு சென்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளை சரளமாக பேசும் நடிகர் நாசர் ரஜினி, கமல், விஜயகாந்த் என  பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கொடூர வில்லனாக நடித்தும் மிரட்டியுள்ளார்.மேலும்  குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் கூட நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் நாசர் தற்போது  ஹாலிவுட் ஹீரோக்களுக்கு இணையாக செம ஸ்டைலாக போட்டோஷூட் ஒன்றை  நடத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான  நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் நடிகர் நாசரா இது! இளம் ஹீரோக்களையே மிஞ்சிட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

 


Advertisement