சினிமா

அள்ளி கொஞ்சலாம்... சிலிர்க்க வைக்கும் சிரிப்பில் உள்ள நடிகை நகுல்லின் கியூட் பேமிலி புகைப்படம்!

Summary:

நடிகர் நகுல் ஸ்ருதி சிலிர்க்க வைக்கும் சிரிப்பில் உள்ள கியூட் பேமிலி புகைப்படம் ஒன்று 

நடிகர் நகுல் ஸ்ருதி சிலிர்க்க வைக்கும் சிரிப்பில் உள்ள கியூட் பேமிலி புகைப்படம் ஒன்று  இணையத்தளத்தில்  வைரலாகி வருகிறது.

 பிரபல முன்னணி நடிகை தேவையாணியின் தம்பி தான் நகுல். தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். 

அதனை தொடர்ந்து அவர், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் சிறந்த பாடகரும் கூட, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் பிரபலமான பாடல்களை பாடியுள்ளார் நகுல்.

 இவர் தனது நெருங்கிய தோழியும் காதலியும் ஆன ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து, இந்த ஜோடிக்கு அகிரா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில்  சிலிர்க்க வைக்கும் அகிரா வின் சிரிப்பில் குடும்பத்துடன் எடுத்த கியூட் பேமிலி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்...

 


Advertisement