சினிமா

54 வயசு ஆச்சு.. இன்னும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை நதியா..! வைரலாகும் அழகிய பேமிலி புகைப்படம்!

Summary:

நடிகை நதியாவின் கணவர் சிரீஸ் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வரு

நடிகை நதியாவின் கணவர் சிரீஸ் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 1985ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நதியா.

அதனை தொடர்ந்து அவர் உயிரே உனக்காக , நிலவே  மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

பின்னர்  அவர் சிரீஸ் என்பவரை திருமணம் செய்து, அவர்களுக்கு சனம், ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர். இன்றுவரை இளமை குறையாமல் இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது விளம்பரங்களில் நடிகை  நதியா நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவரது கணவர் சிரீஸ் பிறந்தநாளை இன்று கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement