சினிமா

தளபதி விஜய் செய்த செயலால், அதிரடியாக பிரபல நடிகர் கேட்ட கேள்வி.! ஆடிப்போன ரசிகர்கள்!!

Summary:

actor nadarajan ask gift to vijay

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய படம்

இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர் விஜய் பிகில் என்று பெயர் எழுதப்பட்ட மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது படக்குழுவினர் பெரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சார் எங்களுக்கு எல்லாம் மோதிரம் கிடையாதா..? ஐ ஆம் வெயிட்டிங்..! என்று கேட்டு,  மிகவும் உற்சாகத்துடன் பிகில் பட குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.


Advertisement