சினிமா

மகள் வயது இளம்பெண்ணை மணந்த வில்லன் நடிகரின் அம்மாவா இது.! 81 வயதிலும் இப்படியா!! வைரலாகும் ஆச்சர்ய வீடியோ!

Summary:

Actor milanth soman mother pushup video viral

தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் மிலிந்த் சோமன். 54 வயது நிறைந்த இவர் இளைஞர்களை மிஞ்சும் அளவிற்கு ஏராளமான பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, செம பிட்டாக இருக்க்கிறார். மேலும் இவர் இந்தியாவின் சூப்பர் மாடல் என அழைக்கப்படுகிறார். ஏராளமான ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்பட்டாளமே உள்ளனர்.

 மிலிந்த் சோமன் கடந்த 2006ம் ஆண்டு நடிகை மைலின் ஜம்பனாஸ் என்பவரை திருமணம் செய்தார். அதனை தொடர்ந்து இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் 2009ம் ஆண்டு  விவாகரத்து செய்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து மிலிந்த் சோமன் 26 வயது நிறைந்த  அங்கிதா என்ற விமான பணிப்பெண்ணை  திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதனை பொருட்படுத்தாத அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மிலிந்த் சோமன் தன்னுடைய  81 வயது நிறைந்த அம்மா  உஷா சோமன் தண்டால் எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், ஜூலை 3, 2020. 81 சிறப்பான வருடங்களை கடந்ததை லாக்டவுனில் பிறந்தநாளாக கொண்டாடுகிறோம். 15 தண்டால் மற்றும் அங்கிதா பேக் செய்த வெனிலா கேக் உடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடுகிறோம் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக  வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Advertisement