மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷ் படத்தில் இணையும் முக்கிய நடிகர்! யாருனு பார்த்தீர்களா!! உற்சாகத்தில் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் பவானி என


actor-mahendiran-join-in-d43-movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் விஜய் சேதுபதி . மேலும் அவர்களுடன்  ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மகேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், கௌரி கிஷன், சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மாஸ்டர் படம் கொரோனோவால் தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில்,  பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது பவானி கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மகேந்திரன் தனுஷின் D43 படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் D43 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் மாஸ்டர் பட குட்டி பவானி மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.