சினிமா

விஜய் டீவியில் ஏற்பட்ட சண்டையால் நிகழ்ச்சியை விட்டு விலகும் பிரபலம்!

Summary:

Actor mahat fight with vijay tv

மக்களை ஈர்ப்பதற்காக நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது தொலைக்காட்சி நிறுவனங்கள. அந்த வகையில் புது புது நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று ஜோடி fun அன்லிமிடெட்.

விஜய் தொலைக்காட்சி பிரபலங்களை கொண்டு நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக தொகுப்பாளினி டிடி, மாகாபா, நடிகர் மகத், யாஷிகா ஆனந்த் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நான்கு நடுவர்களுக்கு ஜோடிகள் பிரித்து தரப்பட்டுள்ளது. அதில் காதல் சுற்றில் நடிகர் மகத்தின் டீம் சித்ரா மற்றும் குமரன் அசத்தலாக நடனமாடினார்கள். ஆனால் அவர்களுக்கு குறைவான மதிப்பெண்களே வழங்கப்பட்டது. இதனால் நடிகர் மகத் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சண்டை போட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரபலங்களை பார்த்து மதிப்பெண் கொடுக்காதீர்கள் என்றும் அவர்களது திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கொடுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின் ஒரு கட்டத்தில் இது போல் இனி நடந்தால் நிகழ்ச்சியிலிருந்து விலகி விடுவேன் இன்று மகத்து கூறியதாக தெரிகிறது.


Advertisement