சினிமா

அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர் குமரிமுத்துவின் மகளைப் பார்த்துருக்கீங்களா! தீயாய் பரவும் வீடியோ!!

Summary:

அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர் குமரிமுத்துவின் மகளைப் பார்த்துருக்கீங்களா! தீயாய் பரவும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான சிரிப்பை தனி அடையாளமாக கொண்டு, தனது காமெடியால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் குமரிமுத்து. இவர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘உதிரி பூக்கள்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவர் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 75 வது வயதில் காலமானார்.

நடிகர் குமரிமுத்துவிற்கு எலிசபெத் என்ற மகள் உள்ளார். அவர் தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் வீடியோ ஒன்றை பகிர்ந்த அவர் அதில் தான் குமரிமுத்துவின் மகள் என அறிமுகம் செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்த சில கருத்துகளை கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 


Advertisement