நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
இரத்தம் சொட்டச்சொட்ட அரக்கனாக கிச்சா; அலறவைக்கும் டீசர்; கிச்சா சுதீப்பின் 46வது திரைப்பட அப்டேட் வீடியோ இதோ.!
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், காந்தார நடிகை சப்தமி கவுடா, டாலி தனஞ்சயா, நவீன் ஷங்கர், டார்லிங் கிருஷ்ணா, வாசுகி வைபவ், அனுப் பண்டாரி மற்றும் வினய் ராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கிச்சா 46.
கடந்த ஓராண்டுக்கு பின்னர் கிச்சா சுதீப் நாயகனாக நடித்து வெளியாகவுள்ள கிச்சா 46 திரைப்படம், முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் நிரம்பிய படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், படக்குழு படத்தின் டீசர் வீடியோ காட்சிகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் கிச்சா இரத்த தாகம் நிறைந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கேற்ப டீசரில் இரத்தகிளறி நிரம்பியுள்ளது.